ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதல் மகளிர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்


ஆசிய விளையாட்டு போட்டி:  துப்பாக்கி சுடுதல் மகளிர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்
x
தினத்தந்தி 27 Sep 2023 3:15 AM GMT (Updated: 27 Sep 2023 8:49 AM GMT)

ஆசிய விளையாட்டு போட்டியின் 5-வது நாளான இன்று துப்பாக்கி சுடுதல் மகளிர் 50 மீட்டர் ரைபிள் போட்டியில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.

ஹாங்சோவ்,

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில், துப்பாக்கி சுடுதல் மகளிர் 50 மீட்டர் ரைபிள் போட்டியில் இந்தியாவின் சிப்ட் கவுர் சம்ரா, மணினி கவுசிக், ஆஷி சவுக்சி ஆகியோர் அடங்கிய மகளிர் அணி வெள்ளி பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது.

இந்த போட்டியில் சிப்ட் கவுர் சம்ரா 594 புள்ளிகள், ஆஷி சவுக்சி 590 புள்ளிகள் மற்றும் மணினி கவுசிக் 580 புள்ளிகள் பெற்றுள்ளனர். இந்திய அணி மொத்தம் 1,764 புள்ளிகளை பெற்று உள்ளது. இதனால், இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 15 ஆக உயர்ந்து உள்ளது.


Next Story