சென்னை 'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து: ஐ.ஓ.பி. அணி வெற்றி


சென்னை ஏ டிவிசன் லீக் கைப்பந்து: ஐ.ஓ.பி. அணி வெற்றி
x

‘ஏ’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டியில் ஐ.ஓ.பி. அணி ஐ.சி.எப். அணியை தோற்கடித்தது.

சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.என்.ஜெ. குழுமம் ஆதரவுடன் மாவட்ட 'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் ஐ.ஓ.பி. அணி 25-23, 25-23, 23-25, 21-25, 15-11 என்ற செட் கணக்கில் ஐ.சி.எப். அணியை தோற்கடித்தது. மற்றொரு விறுவிறுப்பான மோதலில் டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி 22-25, 25-21, 24-26, 25-22, 15-13 என்ற செட் கணக்கில் வருமானவரியை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.


Related Tags :
Next Story