சென்னையில் நடைபெறும் 'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து போட்டி: ஐ.சி.எப். அணி வெற்றி


சென்னையில் நடைபெறும் ஏ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி: ஐ.சி.எப். அணி வெற்றி
x

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐ.சி.எப். அணி நேர்செட்டில் சுங்க இலாகா அணியை தோற்கடித்தது.

சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், எஸ்.என்.ஜெ. குழுமம் ஆதரவுடன் 'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 25-21, 16-25, 26-24, 25-19 என்ற செட் கணக்கில் தமிழ்நாடு போலீஸ் அணியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் ஐ.சி.எப். 25-18, 25-22, 25-19 என்ற நேர்செட்டில் சுங்க இலாகா அணியை தோற்கடித்தது.


Next Story