சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்; இந்திய வீரர் லக்சயா சென் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி!


சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்; இந்திய வீரர் லக்சயா சென் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி!
x

image courtesy; AFP

இந்த தொடரில் ஒற்றையர் பிரிவில் பிரனாய் மற்றும் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ்-சிராக் இணை 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ஷென்சென்,

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள ஷென்சென் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்திய வீரர் லக்சயா சென் 19-21, 18-21 என்ற நேர்செட்டில் சீனாவின் ஷி யுகியிடம் தோல்வி அடைந்து வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 15-21, 21-14, 13-21 என்ற செட் கணக்கில் தாய்லாந்து வீரரான குன்லாவுத் விதித்சர்னிடம் போராடி பணிந்தார்.

இந்த தொடரில் ஒற்றையர் பிரிவில் பிரனாய் மற்றும் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ்-சிராக் இணை ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.


Next Story