காமன்வெல்த் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற பூஜா சிஹாக்கின் கணவர் மர்ம மரணம்


காமன்வெல்த் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற பூஜா சிஹாக்கின் கணவர் மர்ம மரணம்
x

காமன்வெல்த் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற பூஜா சிஹாக்கின் கணவர் மர்ம மரணம் அடைந்து உள்ளார்.ரோத்தக்,2022-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் மல்யுத்த விளையாட்டின் மகளிர் பிரீஸ்டைல் 76 கிலோ எடை பிரிவில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட வீராங்கனை பூஜா சிஹாக். இவர், ஆஸ்திரேலியாவின் நவோமி டி புரூனே என்பவரை வீழ்த்தி இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் வென்று தந்தவர்.

இவரது கணவர் அஜய் நந்தால். இந்நிலையில், அரியானாவின் ரோத்தக் மாவட்டத்தில் மகாராணி கிஷோரி ஜட் கன்யா மகாவித்யாலயா பகுதியருகே அஜய் மரணம் அடைந்து கிடந்து உள்ளார். அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என கூறப்படுகிறது.

இதுபற்றி ரோத்தக் துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் குமார் கூறும்போது, அஜய் நந்தால் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அஜய் அதிக அளவில் மதுபானம் உட்கொண்டதும், அதற்கு அஜயின் நண்பர் ரவியே காரணம் என்றும் அஜயின் தந்தை குற்றச்சாட்டு கூறியுள்ளார் என தெரிவித்து உள்ளார்.

2022-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகரில் கடந்த ஜூலை 28-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடந்து முடிந்தன.


Next Story