டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம்


டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம்
x

பி.வி.சிந்து தனது முதலாவது ஆட்டத்தில் சீன தைபேயின் பாய் யு போவை எதிர்கொள்கிறார்

ஒடென்ஸ்,

டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்ஸ் நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய இளம் நட்சத்திர வீரர் லக்ஷயா சென், சீனாவின் லூ குயாங் சூவை சந்திக்கிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில், ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரான இந்திய முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து தனது முதலாவது ஆட்டத்தில் சீன தைபேயின் பாய் யு போவை எதிர்கொள்கிறார். மாளவிகா பன்சோத், ஆகர்ஷி காஷ்யப், உன்னதி ஹூடா ஆகிய இந்தியர்களும் களம் காணுகிறார்கள்.

1 More update

Next Story