மாவட்ட கைப்பந்து போட்டி: டாக்டர் சிவந்தி கிளப் இறுதிப்போட்டிக்கு தகுதி


மாவட்ட கைப்பந்து போட்டி: டாக்டர் சிவந்தி கிளப் இறுதிப்போட்டிக்கு தகுதி
x

கோப்புப்படம் 

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் மாவட்ட‘பி’ டிவிசன் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் நடந்து வருகிறது.

சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் மாவட்ட 'பி' டிவிசன் ஆண்கள் கைப்பந்து மற்றும் பெண்களுக்கான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் எஸ்.டி.ஏ.டி. அணி 25-14, 23-25, 25-17 என்ற செட் கணக்கில் டாக்டர் சிவந்தி பவுண்டேசனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

மற்றொரு அரைஇறுதியில் டாக்டர் சிவந்தி கிளப் 25-15, 25-10 என்ற நேர்செட்டில் எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் டாக்டர் சிவந்தி கிளப்-எஸ்.டி.ஏ.டி. அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முன்னதாக நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் டாக்டர் சிவந்தி பவுண்டேசன்-எம்.ஓ.பி.வைஷ்ணவா அணிகள் சந்திக்கின்றன.

ஆண்கள் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் அக்னி பிரண்ட்ஸ் கிளப் 15-25, 25-17, 25-19, 25-20 என்ற செட் கணக்கில் ஸ்டேட் வங்கியை விரட்டியடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. மற்றொரு கால்இறுதியில் ஜி.எஸ்.டி. அணி 25-22, 25-18, 25-18 என்ற நேர்செட்டில் நேதாஜி கிளப்பை தோற்கடித்து அரைஇறுதியை எட்டியது.


Next Story