டி20 உலகக் கோப்பை கிரிக்கெட், ஒலிம்பிக் போட்டிகள் தூர்தர்ஷனில் ஒளிபரப்பு


டி20 உலகக் கோப்பை கிரிக்கெட், ஒலிம்பிக் போட்டிகள் தூர்தர்ஷனில் ஒளிபரப்பு
x

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட், ஒலிம்பிக் போட்டிகள் ஆகியவை தூர்தர்ஷன் விளையாட்டு சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

வெஸ்ட்இண்டீஸ், அமெரிக்காவில் நடந்து வரும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் மற்றும் பாரீசில் ஜூலை 26-ந் தேதி முதல் ஆகஸ்ட் 11-ந் தேதி வரை நடைபெறும் ஒலிம்பிக் போட்டி, ஆகஸ்ட் 28-ந் தேதி முதல் செப்டம்பர் 8-ந் தேதி வரை நடைபெறும் பாரா ஒலிம்பிக் ஆகியவை தூர்தர்ஷன் விளையாட்டு சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று பிரசார் பாரதி தலைமை செயல் அதிகாரி கவுரவ் திவேதி டெல்லியில் நேற்று அறிவித்தார்.

உலகக் கோப்பை போட்டி முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே சென்று (ஜூலை 6-14) 5 இருபது ஓவர் போட்டியிலும், இலங்கைக்கு பயணித்து 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் (ஜூலை 27 முதல் ஆகஸ்டு 7-ந் தேதி வரை) விளையாடுகிறது. இந்த போட்டிகளும் தூர்தர்ஷனில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும் பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் டென்னிஸ் ஆகியவற்றின் இறுதி ஆட்டங்களும் ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story