தேசிய விளையாட்டுப் போட்டி - துப்பாக்கி சுடுதலில் இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றார்


தேசிய விளையாட்டுப் போட்டி - துப்பாக்கி சுடுதலில் இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றார்
x

குஜராத் அணிக்காக ஆடிய தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

ஆமதாபாத்,

36-வது தேசிய விளையாட்டுப் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசம், சர்வீசஸ் ஆகிய அணிகளைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் துப்பாக்கி சுடுதல் போட்டியின் மகளின் 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில், குஜராத் அணிக்காக ஆடிய தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன், கர்நாடக வீராங்கனை திலோத்தமாவை 16-10 என்ற புள்ளியின் கணக்கில் தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இந்த போட்டியில் கர்நாடக வீராங்கனை திலோத்தமா வெள்ளிப் பதக்கமும், மேற்கு வங்க வீராங்கனை மெஹுலி கோஷ் வெண்கல பதக்கமும் வென்றனர்.


Next Story