கேலோ இந்தியா விளையாட்டு போட்டி; ஒரே நாளில் தமிழகம் 6 தங்கப்பதக்கங்கள் வென்று அசத்தல்


கேலோ இந்தியா விளையாட்டு போட்டி; ஒரே நாளில் தமிழகம் 6 தங்கப்பதக்கங்கள் வென்று அசத்தல்
x

பதக்கப்பட்டியலில் தமிழகம் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளது.

சென்னை,

6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 19ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் வருகிற 31-ந் தேதி வரை 12 நாட்கள் கேலோ இந்தியா விளையாட்டு போட்டி நடைபெறுகிறது.

இந்த விளையாட்டு திருவிழாவில் தடகளம், கால்பந்து, கபடி, கைப்பந்து, ஆக்கி, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், பேட்மிண்டன், மல்யுத்தம், பளு தூக்குதல், டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து, நீச்சல், வாள்வீச்சு, குத்துச்சண்டை, ஸ்குவாஷ் உள்ளிட்ட 26 போட்டிகள் இடம் பெற்றுள்ளன.

18 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்த போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 5,630 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் 5-வது நாளான நேற்றும் தமிழகத்தின் பதக்க வேட்டை நீடித்தது. இதில் நேற்று நடைபெற்ற 110 மீ தடை ஓட்டம், 400 மீ ஓட்டம், ஸ்குவாஷ், சைக்கிளிங்கில் பெண்களுக்கான தனிநபர் பர்சுயிட் & 10 கிமீ ஸ்கிராச் மற்றும் யோகாசனத்தில் ஆர்டிஸ்டிக் ஜோடி பிரிவு ஆகிய போட்டிகளில் தமிழக வீரர், வீராங்கனைகள் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.

நேற்றைய முடிவில் பதக்கப்பட்டியலில் தமிழகம் 2-வது இடத்திற்கு சரிந்தது. 12 தங்கம், 3 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 31 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. மராட்டியம் 14 தங்கம் உள்பட 45 பதக்கங்கள் குவித்து முதலிடத்துக்கு முன்னேறியது.

1 More update

Next Story