செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம்: சென்னையில் பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உற்சாக வரவேற்பு


செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம்: சென்னையில் பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உற்சாக வரவேற்பு
x

பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை,

ஹங்கேரியில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட்டில், இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் அணி தங்கப்பதக்கங்களை வென்றன. இதில், ஆடவர் மற்றும் மகளிர் அணிகளில் தமிழகத்தை சேர்ந்த அக்கா, தம்பியான வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோர் கலந்து கொண்டு விளையாடினர்.

இந்நிலையில் தங்கப்பதக்கம் வென்ற வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோர் இன்று சென்னைக்கு திரும்பினர். அவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


1 More update

Next Story