ஆசிய விளையாட்டு: ஹாக்கி போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தியது இந்தியா


ஆசிய விளையாட்டு: ஹாக்கி போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தியது இந்தியா
x
தினத்தந்தி 26 Sep 2023 2:57 AM GMT (Updated: 26 Sep 2023 5:21 AM GMT)

ஆசிய விளையாட்டு தொடரில் இன்று நடைபெற்ற ஹாக்கி போட்டியில் சிங்கப்பூர் அணியை இந்தியா வீழ்த்தியது.

ஹாங்சோவ்,

ஆசிய விளையாட்டு தொடரில் இன்று நடைபெற்ற ஆடவர் ஹாக்கி போட்டியில் சிங்கப்பூர் அணியும் இந்திய அணியும் மோதின. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 16-1 என்ற கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தியது.

மொத்தம் ஒன்பது வீரர்கள் கோல் அடித்து தங்கள் பங்களிப்பை வெளிப்படுத்தினர். கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் நான்கு கோல்களை அடித்து அசத்தினார், அதே சமயம் மந்தீப் சிங் கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார்.


Next Story