ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் இந்தியா இணைக்கு தங்க பதக்கம்


ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் இந்தியா இணைக்கு தங்க பதக்கம்
x

ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அபினவ், கவுதமி இணை ஏர் ரைபிள் கலப்பு அணியில் தங்க பதக்கம் வென்று உள்ளது.

புதுடெல்லி,

கொரியாவின் சாங்வோன் நகரில் ஐ.எஸ்.எஸ்.எப்.பின் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில், இந்தியாவின் அபினவ் ஷா மற்றும் கவுதமி பனோட் ஆகியோர் கொண்ட இணை ஏர் ரைபிள் கலப்பு அணிக்கான போட்டியில் அதிரடியாக விளையாடியது.

இந்த போட்டியில், பிரான்ஸ் நாட்டின் ஓசன் முல்லர் மற்றும் ரொமைன் ஆப்ரீர் இணையை இந்திய இணை 17-13 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்க பதக்கம் வென்று உள்ளது.

இது போட்டியில் இந்தியாவுக்கான 3-வது தங்க பதக்கம் ஆகும். பதக்க பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இந்தியாவை போன்று அதே அளவிலான தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை சீனா வென்று உள்ளது. எனினும், கூடுதலாக ஒரு வெள்ளி பதக்கம் வென்று முதல் இடத்தில் உள்ளது.


Next Story