அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து


அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து
x

கோப்புப்படம் 

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பி.வி.சிந்து-சீனாவின் ஜாங்யி மேன் பலப்பரீட்சை நடத்தினர்.

கோலாலம்பூர்,

மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பி.வி.சிந்து-சீனாவின் ஜாங்யி மேன் பலப்பரீட்சை நடத்தினர்.

இதில் சிந்து 21-16, 13-21, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் அரை இறுதி போட்டியில் இந்தோனேசிய வீராங்கனை ஜி.துஞ்சங்வுடன் நாளை மோதுகிறார்.


Next Story