ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை தங்கம் வென்று சாதனை

ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் 2022ல் இந்திய வீராங்கனை ஆன்டிம் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சோபியா,
பல்கேரியாவில், 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் பெண்களுக்கான 53 கிலோ எடைப் பிரிவில் ஆன்டிம் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார். ஜீனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை என்ற சாதனையை ஆன்டிம் பங்கல் படைத்துள்ளார்
தகுதிச் சுற்றில் ஆன்டிம் 11-0 என்ற கணக்கில் ஜெர்மன் மல்யுத்த வீரரை தோற்கடித்தார். காலிறுதியில், ஜப்பானிய கிராப்லரை ஆன்டிம் வீழ்த்தியதால் ஜப்பானியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அரையிறுதியில், உக்ரைன் மல்யுத்த வீரரை எளிதில் தோற்கடித்த அவர், இறுதிப் போட்டியில், கசாக் மல்யுத்த வீரரை தோற்கடித்தார்.
மற்ற இரண்டு மல்யுத்த வீரர்களும் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றனர். மற்ற இரண்டு மல்யுத்த வீரர்கள் வெண்கலப் பதக்கப் போட்டிகளை வென்றனர். இதன் மூலம் இந்திய ஜூனியர் மகளிர் மல்யுத்த அணி 160 புள்ளிகளுடன் ரன்னர் அப் கோப்பையையும், 230 புள்ளிகளுடன் ஜப்பான் முதலிடத்தையும், 124 புள்ளிகளுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
இந்தியா சார்பில் ஆன்டிம் 53 கிலோ எடைப் பிரிவில் தங்கமும், சோனம் 62 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கமும், 65 கிலோ பிரிவில் சோனம் வெள்ளிப் பதக்கமும், 57 கிலோ எடைப் பிரிவில் சிட்டோ மற்றும் ரீத்திகா வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
கிரேக்க-ரோமன் பாணியில், ஐந்து மல்யுத்த வீரர்களும் தங்கள் முதல் போட்டியில் தோற்றனர். மீதமுள்ள ஐந்து எடைப் பிரிவுகளுக்கான போட்டிகள் இன்று நடைபெறும்






