கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு இலச்சினை அறிமுகம்..!!


கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு இலச்சினை அறிமுகம்..!!
x

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிக்கான, திருவள்ளூவர் இலச்சினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.

சென்னை,

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2023-ம் ஆண்டுக்கான போட்டிகள், அடுத்த ஆண்டு ஜனவரி 19-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்பட 4 இடங்களில் நடைபெறுகிறது.

இந்நிலையில் போட்டிக்கான லோகோ அறிமுக விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, எஸ்.டி.ஏ.டி. உறுப்பினர் செயலாளர் மேகநாதரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிக்கான, திருவள்ளூவர் இலச்சினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்தார். அதைத் தொடர்ந்து போட்டிக்கான வேலுநாச்சியாரின் 'வீரமங்கை' சின்னத்தையும், ஜெர்சியையும் மத்திய மந்திரி அனுராக் தாக்குர் அறிமுகம் செய்து வைத்தார். கேலோ இந்தியா 2023-ம் ஆண்டுக்கான 'தீம்' பாடலும் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்டன.


Next Story