ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி அதிர்ச்சி தோல்வி!


ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி அதிர்ச்சி தோல்வி!
x

image courtesy;AFP

ஜப்பான் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள குமாமோட்டோ நகரில் நேற்று தொடங்கியது.

குமாமோட்டோ,

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஜப்பான் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள குமாமோட்டோ நகரில் நேற்று தொடங்கியது. இந்த தொடர் வரும் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி இணை சீன-தைபே ஜோடியான சிங் யாவ்- யாங் போ ஹான் இணையிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

இதில் முதலாவது செட்டை கைப்பற்றிய இந்திய இணை அடுத்த இரு செட்டுகளை இழந்தது. இந்த ஆட்டத்தில் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி 21-16, 18-21, 16-21 என்ற செட் கணக்கில் சீன-தைபே இணையிடம் தோல்வி அடைந்து முதல் சுற்றுடன் வெளியேறியது.


Next Story