டயமண்ட் லீக் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி: 2-வது இடம்பிடித்தார் நீரஜ் சோப்ரா

கோப்புப்படம்
யூஜினில் நடைபெற்ற டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 83.80 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிபதக்கத்தை வென்றார்.
யூஜின்,
யூஜினில் நடைபெற்ற டயமண்ட் லீக் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா 83.80 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்று அசத்தினார்.
தங்கம் வென்ற செக் குடியரசின் நட்சத்திர வீரர் ஜக்குப் வட்லெஜ்ச் தனது இறுதி முயற்சியில் 84.24 மீ. சிறந்த எறிதலை பதிவு செய்தார், ஆனால் அவரது முதல் எறிதல் 84.01 மீ. இருந்தது. பின்லாந்தின் ஆலிவர் ஹெலண்டர் 83.74 எறிந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார். ஆண்ட்ரியன் மார்டரே (81.79 மீ), கர்டிஸ் தாம்சன் (77.01 மீ), மற்றும் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (74.71 மீ) ஆகியோர் முறையே நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தைப் பிடித்தனர்.
Related Tags :
Next Story






