பாரா ஒலிம்பிக் :தங்கம், வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து


பாரா ஒலிம்பிக் :தங்கம், வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு  பிரதமர் மோடி வாழ்த்து
x

அவனி லேகரா மற்றும் மோனா அகர்வாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாரீஸ்,

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பாரா ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் பிரிவு இன்று நடைபெற்றது. 8 வீராங்கனைகள் பங்கேற்ற இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனைகள் தங்கம் , வெண்கலம் என 2 பதக்கங்களை வென்றுள்ளனர்.

இந்திய வீராங்கனை அவனி லேகரா 249.7 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.மற்றொரு இந்திய வீராங்கனை மோனா அகர்வால் 228.7 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார்.

இந்த நிலையில் அவனி லேகரா மற்றும் மோனா அகர்வாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்ற அவனி லேகராவுக்கு வாழ்த்துகள். மேலும் பாரா ஒலிம்பிக்கில் 3 பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையும் படைத்துள்ளார். அவனி லேகராவின் அர்ப்பணிப்பு இந்தியாவை பெருமைப்படுத்துகிறது.என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்ட மற்றொரு பதிவில்,

வெண்கலப் பதக்கம் வென்ற மோனா அகர்வாலுக்கு வாழ்த்துகள். மோனா அகர்வாலின் குறிப்பிடத்தக்க சாதனை அவரது அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. மோனாவால் இந்தியா பெருமை கொள்கிறது. என தெரிவித்துள்ளார்.


Next Story