பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் தகுதி

image courtesy: PTI
பாரீஸ் ஒலிம்பிக் தொடருக்கு இந்திய மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் தகுதி பெற்றுள்ளார்.
இஸ்தான்புல்,
பாரீஸ் ஒலிம்பிக் தொடருக்கான உலக மல்யுத்த தகுதி சுற்று போட்டி துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான பிரீஸ்டைல் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமன் ஷெராவத், காலிறுதியில் உக்ரைனின் ஆன்ட்ரியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.
அரையிறுதியில் 2023 ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற வட கொரியாவின் சோங்சங் ஹானை சந்தித்தார். துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய அமன், முடிவில் 12-2 என வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் அமன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
Related Tags :
Next Story






