நலிந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் - எஸ்.டி.ஏ.டி. அறிவிப்பு


நலிந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் - எஸ்.டி.ஏ.டி. அறிவிப்பு
x

நலிந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி. ) அறிவித்துள்ளது.

சென்னை,

சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள சென்னை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மாத ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவதற்கு www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி. ) அறிவித்துள்ளது.

ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்கும் வீரர்கள் மத்திய அரசு, இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச, தேசிய போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கடந்த ஜனவரி 31-ந் தேதிக்குள் 58 வயது பூர்த்தி அடைந்தவராகவும், தமிழகத்தை சேர்ந்தவராகவும், தமிழ்நாடு சார்பில் போட்டியில் பங்கேற்றவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.15 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். மேலும் மத்திய, மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியில்லை. முதியோர்களுக்கான (வெட்ரன்) விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story