புரோ கபடி லீக்; பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் திரில் வெற்றி..!


புரோ கபடி லீக்; பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் திரில் வெற்றி..!
x

image courtesy; twitter/ @ProKabaddi

இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் யு மும்பா - தமிழ் தலைவாஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

புனே,

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இதில் இன்று நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 29-28 என்ற புள்ளி கணக்கில் திரில் வெற்றி பெற்றது.

இதில் இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் யு மும்பா - தமிழ் தலைவாஸ் அணிகள் விளையாடி வருகின்றன.


Next Story