பேட்மிண்டன் தரவரிசையில் சிந்து பின்னடைவு


பேட்மிண்டன் தரவரிசையில் சிந்து பின்னடைவு
x

கோப்புப்படம்

பேட்மிண்டன் தரவரிசையில் சிந்து பின்னடைவை சந்தித்துள்ளார்.

புதுடெல்லி,

பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசைபட்டியலை சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டாப்-10 இடங்களில் எந்தவித மாற்றமும் இல்லை. ஒலிம்பிக் சாம்பியனான டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென் முதலிடத்திலும், இந்திய வீரர் பிரனாய் 9-வது இடத்திலும் நீடிக்கின்றனர். இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த் ஒரு இடம் சறுக்கி 21-வது இடத்திலும், லக்ஷயா சென் 25-வது இடத்திலும் உள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுச்சி முதலிடத்தில் தொடருகிறார். சமீபத்தில் நடந்த சுவிஸ் ஓபன் போட்டியில் 2-வது சுற்றில் தோல்வி கண்ட இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 2 இடம் சரிந்து 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். முன்னாள் உலக சாம்பியனும், ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவருமான 27 வயது சிந்து 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு தரவரிசையில் டாப்-10 இடங்களுக்குள் இருந்து வெளியேறி இருப்பது இதுவே முதல்முறையாகும்.


Next Story