ரேங்கிங் மல்யுத்தம்: இந்திய வீரர் மன்ஜீத் வெண்கலம் வென்றார்


ரேங்கிங் மல்யுத்தம்: இந்திய வீரர் மன்ஜீத் வெண்கலம் வென்றார்
x

கோப்புப்படம் 

கஜகஸ்தானின் வீரரை வீழ்த்தி மன்ஜீத் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

பிஷ்கெக்,

ரேங்கிங் சீரிஸ் மல்யுத்த போட்டி கிர்கிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான கிரிகோ ரோமன் 55 கிலோ உடல் எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீரர் மன்ஜீத், உஸ்பெகிஸ்தானின் இக்தியோர் போடிரோவிடம் தோல்வி அடைந்தார். ஆனால் இக்தியோர் இறுதிப்போட்டி வரை முன்னேறியதால் அவரிடம் தோற்ற மன்ஜீத்துக்கு 'ரெபிசாஜ்' மூலம் இன்னொரு வாய்ப்பு கிடைத்தது.

இதில் மன்ஜீத் 14-9 என்ற கணக்கில் கஜகஸ்தானின் யேர்சின் அப்யிரை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்தினார். 60 கிலோ எடைப்பிரிவில் சுமித், 67 கிலோ பிரிவில் நீரஜ் ஆகிய இந்தியர்கள் 'ரெபிசாஜ்' ரவுண்டில் தோற்று பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தனர்.


Next Story