ஆசிய குத்துச்சண்டை: இந்திய வீரர் ஷிவ தபாவுக்கு வெள்ளிப்பதக்கம்


ஆசிய குத்துச்சண்டை: இந்திய வீரர் ஷிவ தபாவுக்கு வெள்ளிப்பதக்கம்
x

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ஷிவ தபாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 63.5 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஷிவ தபா, உஸ்பெகிஸ்தானின் அப்துல்லா ரஸ்லனை சந்தித்தார். இதன் 2-வது ரவுண்டில் பின்தங்கி இருந்த நிலையில் ஷிவ தபா கீழே விழுந்தார். இதில் அவருக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக போட்டி நிறுத்தப்பட்டு ஷிவ தபாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. வலி அதிகம் இருந்ததால் ஷிவ தபா போட்டியில் இருந்து விலகினார். அப்துல்லா ரஸ்லன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பாதியில் விலகிய ஷிவ தபாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிட்டியது. ஆசிய போட்டியில் ஷிவ தபா வென்ற 6-வது பதக்கம் இதுவாகும்.


Next Story