துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி


துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 22 Aug 2023 2:06 AM IST (Updated: 22 Aug 2023 2:07 AM IST)
t-max-icont-min-icon

சிப்ட் கவுர் சம்ரா அடுத்த ஆண்டு பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

பாகு,

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் போட்டியின் ( 3 நிலை) இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா 429.1 புள்ளிகள் எடுத்து 5-வது இடம் பிடித்தார்.

இதன் மூலம் சிப்ட் கவுர் சம்ரா அடுத்த ஆண்டு பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க துப்பாக்கி சுடுதலில் இந்தியா பெற்ற 6-வது கோட்டா இதுவாகும்.

1 More update

Next Story