எஸ்.டி.ஏ.டி. - ஜப்பான் கிளப் சார்பில் சிறப்பு நீச்சல் பயிற்சி முகாம் - சென்னையில் இன்று நடக்கிறது


எஸ்.டி.ஏ.டி. - ஜப்பான் கிளப் சார்பில் சிறப்பு நீச்சல் பயிற்சி முகாம் - சென்னையில் இன்று நடக்கிறது
x

கோப்புப்படம் 

சென்னை வேளச்சேரில் உள்ள நீச்சல் குள வளாகத்தில் சிறப்பு நீச்சல் பயிற்சி முகாம் இன்று நடக்கிறது.

சென்னை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.) மற்றும் ஒகாசாகி டட்சுகி நீச்சல் கிளப்புடன் இணைந்து ஐப்பானின் புகழ் பெற்ற நீச்சல் வீரரான யூமா எடோ தலைமையில் சென்னை வேளச்சேரில் உள்ள நீச்சல் குள வளாகத்தில் சிறப்பு நீச்சல் பயிற்சி முகாம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணி வரை நடக்கிறது.

தமிழ்நாட்டின் நீச்சல் தரத்தை உயர்த்துவதற்கும், சர்வதேச விளையாட்டு நுட்ப பரிமாற்றத்தை வளர்ப்பதற்கும் இந்த சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் நீச்சல் பயிற்சியாளர்கள் மற்றும் வீரர், வீராங்கனைகள் சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் குள வளாக அதிகாரி லோகநாதனை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story