பெண்களுக்கான மாநில தடகள போட்டி


பெண்களுக்கான மாநில தடகள போட்டி
x

பெண்களுக்கான மாநில தடகள போட்டி சென்னையில் நாளை நடக்க உள்ளது.

சென்னை,

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் சாய் மற்றும் இந்திய தடகள சம்மேளனம் ஆதரவுடன் 2-வது கேலோ இந்தியா பெண்கள் தடகள லீக் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை (புதன்கிழமை) நடக்க உள்ளது.

இதில் 12, 14, 15, 17, 20, 30, 35, 40, 45, 50, 55 ஆகிய பிரிவினருக்கு 16 பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 700 வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள் என்று தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா தெரிவித்துள்ளார்.


Next Story