பல்கலை. விளையாட்டில் அசத்தல்: பிரதமர் வாழ்த்து


பல்கலை. விளையாட்டில் அசத்தல்: பிரதமர் வாழ்த்து
x
தினத்தந்தி 9 Aug 2023 10:18 AM IST (Updated: 9 Aug 2023 10:36 AM IST)
t-max-icont-min-icon

உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பெய்ஜிங்,

சீனாவின் செங்டுவில் நேற்று நிறைவடைந்த 31-வது உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டியில் இந்தியா 11 தங்கம், 5 வெள்ளி, 10 வெண்கலம் என்று மொத்தம் 26 பதக்கங்களை குவித்து 7-வது இடத்தை பிடித்தது. பல்கலைக்கழக விளையாட்டில் இந்தியாவின் சிறந்த செயல்பாடு இதுவாகும். இதற்கு முன்பு 21 பதக்கம் வென்றதே அதிகபட்சமாக இருந்தது. சீனா மொத்தம் 178 பதக்கங்களுடன் முதலிடத்தை பெற்றது.

பதக்கம் வென்று சாதித்த இந்திய வீரர்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 'விளையாட்டில் நிகழ்த்தப்படும் சாதனை ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்பட வைக்கிறது. தேசத்திற்கு வெற்றியை தேடித்தந்து, எதிர்கால விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் இந்த வீரர்களுக்கு ஒரு சல்யூட்' என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story