"உங்களால் நாங்கள் பெருமை அடைகிறோம்" - நீரஜ் சோப்ராவுக்கு யுவராஜ் சிங் வாழ்த்து


உங்களால் நாங்கள் பெருமை அடைகிறோம் - நீரஜ் சோப்ராவுக்கு யுவராஜ் சிங் வாழ்த்து
x

தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

அங்கேரி நாட்டின் புதாபெஸ்டில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார். பதக்கம் வென்ற அவர் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார். அவருக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

யுவராஜ் சிங் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில், "உலகத் தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள். தங்கப் பதக்கங்கள் உண்மையில் தங்கத்தால் ஆனவை அல்ல, அவை வியர்வை, கடின உழைப்பு மற்றும் உறுதியால் செய்யப்பட்டவை. உங்களால் நாங்கள் பெருமை அடைகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story