உலக தடகள சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நீரஜ் சோப்ரா...!


உலக தடகள சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நீரஜ் சோப்ரா...!
x

உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் நீரஜ் சோப்ரா நேரடியாக தகுதி பெற்றார்.

புடபெட்ஸ்,

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஹங்கேரி நாட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதி தொடங்கிய இந்த சாம்பியன்ஷிப் தொடர் வரும் 27ம் தேதி வரை நடைபெற்ற உள்ளது.

இதில், ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்றுப்போட்டி இன்று நடைபெற்றது.

இதில், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற 83.00 மீட்டர் வீச வேண்டும். இதில், முதல் முயற்சியிலேயே நீரஜ் சோப்ரா 88.77 மீட்டர் தூரம் வீசினார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி பெற்றார். இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

மிகவும் நீண்ட தூரம் வீசியதன் மூலம் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றார்.


Next Story