சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்..!


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்..!
x

Image Courtesy: @CincyTennis

தினத்தந்தி 20 Aug 2023 8:57 AM GMT (Updated: 20 Aug 2023 10:42 AM GMT)

இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் உடன் நாளை மோதுகிறார்.

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஜோகோவிச், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 7-6, 7-5 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிஆட்டத்தில் ஜோகோவிச் டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் உடன் நாளை மோதுகிறார்.


Next Story