ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் டோனி ...வீடியோ வெளியிட்ட அணி நிர்வாகம்


ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் டோனி ...வீடியோ வெளியிட்ட அணி நிர்வாகம்
x
தினத்தந்தி 1 Dec 2021 6:45 AM GMT (Updated: 1 Dec 2021 6:45 AM GMT)

சென்னை வீரர்கள் தாங்கள் தக்கவைக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வீடியோ ஒன்றை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

சென்னை,

ஐ.பி.எல். 2022 ஆம் ஆண்டு சீசனை முன்னிட்டு மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறுகிறது. அதற்காக அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்து கொள்ள முடியும். இதில் அதிகபட்சம் 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்க வைத்து கொள்ள முடியும்.

எந்தெந்த அணிகளில் யார் யார் தக்கவைக்கபட்டனர்  என்பது குறித்த இறுதி பட்டியல் நேற்று வெளியானது. இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவீந்திர ஜடேஜா (ரூ. 16 கோடி) எம்எஸ் டோனி ( ரூ. 12 கோடி) மொயீன் அலி (ரூ. 8 கோடி) ருதுராஜ் கெய்க்வாட் (ரூ. 6 கோடி) ஆகியோரை தக்கவைத்து கொண்டது.

இந்த நிலையில் சென்னை வீரர்கள் தாங்கள் தக்கவைக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வீடியோ ஒன்றை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் சென்னை அணியின் கேப்டன் டோனி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் காட்சி இடம்பெற்றுள்ளது.

Next Story