தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்தியா பேட்டிங் தேர்வு


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்தியா பேட்டிங் தேர்வு
x
தினத்தந்தி 26 Dec 2021 1:26 PM IST (Updated: 26 Dec 2021 1:26 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா- தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் இன்று நடைபெறுகிறது.

செஞ்சூரியன், 

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. 

இதையொட்டி இரு அணி வீரர்களும் சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். ஒமைக்ரான் அச்சுறுத்தல் எதிரொலியாக ரசிகர்கள் இன்றி கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இந்த போட்டி அரங்கேறுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்த போட்டியின் போது, முதல் இரு நாட்களில் மட்டும் மழை குறுக்கிட வாய்ப்புள்ளது. மழை பெய்வதற்கு 60 சதவீதம் வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-

இந்தியா: லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷாப் பண்ட், அஸ்வின், ஷர்துல் தாக்குர், முகமது ஷமி, முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.

தென்ஆப்பிரிக்கா: டீன் எல்கர் (கேப்டன்), மார்க்ராம், கீகன் பீட்டர்சன், வான்டெர் துஸ்சென், பவுமா, குயின்டான் டி காக், வியான் முல்டர், மார்கோ ஜேன்சன், கேஷவ் மகராஜ், ரபடா, நிகிடி.

Next Story