ஆஷஸ் டெஸ்ட் : ஆஸ்திரேலியா அபார பந்து வீச்சு : 188 ரன்களுக்கு ஆல் -அவுட் ஆனது இங்கிலாந்து ..!


ஆஷஸ் டெஸ்ட் : ஆஸ்திரேலியா அபார பந்து வீச்சு : 188 ரன்களுக்கு ஆல் -அவுட் ஆனது இங்கிலாந்து ..!
x
தினத்தந்தி 15 Jan 2022 11:18 AM GMT (Updated: 15 Jan 2022 11:18 AM GMT)

5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஹாபெர்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது

ஹாபெர்ட்,

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், 4 டெஸ்ட் போட்டிகள் ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில் 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஹாபெர்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி  களமிறங்கியது. தொடக்க வீரர்கள் வார்னர் (0) ரன் எதுவும் எடுக்காமலும், கவாஜா 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்துவந்த லபுஷேன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 44 ரன்கள் எடுத்த நிலையில், ஸ்மித் (0) ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறினார்.

பின்னர் வந்த டிராவஸ் ஹெட் மற்றும் கமரூன் கிரீன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டிராவஸ் ஹெட் சதம் அடித்தார். அவர் 101 ரன்களில் வெளியேறினார். கமரூன் கிரீன் 74 ரன்கள் எடுத்த நிலையில் மார்க் வுட் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 303 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

 தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது .இதனால் இங்கிலாந்து அணி 85 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறி வந்தது .பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால்  இங்கிலாந்து 188 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது .

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரூட் 34 ரன்கள் எடுத்தார் .

ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் கம்மின்ஸ் 4 விக்கெட்டும் ,ஸ்டார்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆஸ்திரேலியா  தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது.  


Next Story