ஐ.பி.எல் ஏலத்தில் அடித்த ஜாக்பாட் : சக வீரர்களுக்கு பீட்சா விருந்து அளித்த பூரன்


ஐ.பி.எல் ஏலத்தில் அடித்த ஜாக்பாட் : சக வீரர்களுக்கு பீட்சா விருந்து அளித்த பூரன்
x
தினத்தந்தி 16 Feb 2022 9:53 AM GMT (Updated: 16 Feb 2022 9:53 AM GMT)

2022 ஐ.பி.எல் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ 10.75 கோடிக்கு வெஸ்ட் இண்டீஸ் வீரரான நிக்கோலஸ் பூரனை ஏலத்தில் எடுத்துள்ளது.

புதுடெல்லி, 

15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது.  இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் பிப்ரவரி,12 மற்றும் 13ஆம் தேதிகளில் நடைபெற்றது.

இந்த ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ 10.75 கோடிக்கு வெஸ்ட் இண்டீஸ் வீரரான நிக்கோலஸ் பூரனை ஏலத்தில் எடுத்தது. 

ஐபிஎல் 2021 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய நிக்கோலஸ் பூரன் 7.72 என்ற மோசமான சராசரியில் 85 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார், மேலும் இந்தியாவுக்கு எதிரான தொடரிலும் அவர் சிறப்பாக செயல்படவில்லை இருந்தபோதிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை ஏலத்தில் எடுத்ததுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்  அணி கிரேடு ஒன் பயோ-பப்பில் இருப்பதால்,கடுமையான பாதுகாப்பு  கட்டுபாடுகளுக்கு உட்பட்டு உணவு பொருட்கள் அனைத்தும் சுத்திகரிக்கப்பட்டு வெப்பநிலை  பராமரிக்கப்பட வேண்டும்.

இந்நிலையில் ஐ.பி.எல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கபட்டதால் மகிழ்ச்சியடைந்த நிக்கோலஸ் பூரன் ரூ 15000 ஆயிரம் மதிப்பிலான 15 பீட்சாக்களை ஆர்டர் செய்து. தனது வெஸ்ட் இண்டீஸ் அணியினருக்கு பயோ-பப்பிளுக்குள் பீட்சா விருந்து கொடுத்துள்ளார்.

Next Story