இந்த ஆண்டாவது அதிர்ஷ்டம் அடிக்குமா? புதிய ஜெர்சியை வெளியிட்ட பஞ்சாப் கிங்ஸ்


இந்த ஆண்டாவது அதிர்ஷ்டம் அடிக்குமா? புதிய ஜெர்சியை வெளியிட்ட பஞ்சாப் கிங்ஸ்
x
தினத்தந்தி 17 March 2022 2:34 PM GMT (Updated: 17 March 2022 2:34 PM GMT)

பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் 2022 சீசனில் அணியும் புதிய ஜெர்சியை வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் வரும் 26 ஆம் தேதி மும்பையில் தொடங்க இருக்கிறது. கடந்த 14 ஜபில் சீசனிலும் ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத அணியாக பஞ்சாப் அணி உள்ளது. அதிர்ஷ்டம் அடிக்கும் என பல கேப்டன்களை மாற்றி பார்த்தது. ஆனால் அந்த அணிக்கு சோகமே மிஞ்சியது.

இந்நிலையில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 சீசனுக்காக புதிய ஜெர்சியை பஞ்சாப் கிங்ஸ் வெளியிட்டுள்ளது. இது கடந்த சீசனில் அவர்கள் அணிந்திருந்த ஜெர்சியை போலவே உள்ளது, அதிலிருந்த "கிங்ஸ் லெவன் பஞ்சாப்" என்ற பழைய பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது.

இந்த ஜெர்சியில் அந்த அணியின் புதிய பெயரான “பஞ்சாப் கிங்ஸ்” என அச்சடிக்கப்பட்டுள்ளது.

கடந்த சீசனில் அவர்களது புதிய ஜெர்சியை வெளியிட்ட போது, அது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் ஜெர்சியை போன்று இருந்ததாக சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஒப்பிட்டு கேலி செய்திருந்தார்.

பஞ்சாப் கிங்ஸின் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. 2022 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை எதிர்கொள்கிறது. இந்த போட்டி மார்ச் 27-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக மயங்க் அகர்வால் அறிவிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story