இந்தியா - பிரான்ஸ் இடையே புதிய ஒப்பந்தம்

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் வெளியுறவு மந்திரி லீ டிரியன், புதுடெல்லியில் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்தார்.

Update: 2018-12-15 15:10 GMT
புதுடெல்லி,

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் வெளியுறவு மந்திரி லீ டிரியன், புதுடெல்லியில் வெளியுறவு  மந்திரி சுவராஜை சந்தித்தார்.

 20 - வது ஆண்டு நட்புறவை கொண்டாடும் வகையில், இரு நாடுகளுக்கு இடையே தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான  ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுஷ்மா, இந்தியா-பிரான்ஸ் இடையிலான உறவுகள் வரலாற்று சிறப்பு வாய்ந்தது, தனித்துவமானது.  இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத்துறை கூட்டுறவை அதிகரிக்க இன்றைய சந்திப்பின்போது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து  ஜீம் யுவேஸ் லி டிரியன் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

மேலும் செய்திகள்