பாகிஸ்தான் செய்ய வேண்டியதை நாங்கள் செய்தோம் - நிர்மலா சீதாராமன்

பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் செய்திருக்க வேண்டியதை நாங்கள் செய்தோம் என மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். #NirmalaSitharaman

Update: 2019-03-10 17:53 GMT
சென்னை,

சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், “பாகிஸ்தான், பயங்கரவாதிகளுக்கு பயிற்சி, நிதி, ராணுவ உதவி அளித்து வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் நாடாகவே இருந்து வருகிறது. மேலும் அவர்கள் பயங்கரவாதிகளுக்கு எதிராக செயல்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. தற்கொலைப் படை தாக்குதலுக்கான பயிற்சியும், நிதியும் அளிக்கப்படும் மையத்தை தாக்குவதாக முடிவு எடுத்தோம்.

இது ராணுவ நடவடிக்கை அல்ல. இது பயங்கரவாதிகளுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல். இதை பாகிஸ்தான் செய்திருக்க வேண்டும். அவர்கள் செய்யவில்லை. இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பயிற்சி அளிக்கப்பட்ட பயங்கரவாதிகள் தங்கி இருந்த முகாம்களை நமது விமானப்படையை வைத்து தகர்த்திருக்கிறோம்” என தெரிவித்தார்.  

மேலும் செய்திகள்