சேலத்தில் 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 5 பேர் கைது

சேலத்தில் 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை புகாரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;

Update:2023-04-30 11:03 IST

சேலம்,

சேலம் மாவட்டத்தில் 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் வினித், விக்னேஷ், ஆகாஷ், சீனிவாசன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்