கொல்லங்கோடு:
கொல்லங்கோடு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் கொல்லங்கோடு கண்ணனாகம் சந்திப்பு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசார் கண்டதும் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து சோதனையிட்ட ேபாது மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் வள்ளவிளையை சேர்ந்த அலி அக்பர் (வயது25), சபீக் (23) என்பதும், மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.