அம்மன் கோவில்களில் தசரா திருவிழா

களக்காடு பகுதியில் அம்மன் கோவில்களில் தசரா திருவிழா நடந்தது.

Update: 2023-10-25 19:56 GMT

களக்காடு:

களக்காட்டில் 14-ம் ஆண்டு தசரா விழா நேற்று நடந்தது. இதையொட்டி களக்காடு நாடார் புதுத்தெரு முப்பிடாதி அம்மன், சிதம்பரபுரம் உச்சினிமாகாளி அம்மன், பாரதிபுரம் உச்சினிமாகாளி அம்மன், மேலரதவீதி கற்பகவல்லி அம்மன், கோவில்பத்து துர்க்கா பரமேஸ்வரி அம்மன், கோவில்பத்து முப்பிடாதி அம்மன், விஸ்வகர்மா தெரு சந்தனமாரி அம்மன், தோப்புத்தெரு அங்காள பரமேஸ்வரி அம்மன், கழுகேற்றி முக்கு முப்பிடாதி அம்மன், கப்பலோட்டிய தமிழன் தெரு முப்பிடாதி அம்மன் கோவில்களில் இருந்து 10 அம்மன் சப்பரங்களும் களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்பாள் கோவில் முன்பு வந்து பக்தர்களுக்கு எழுந்தருளி காட்சி அளித்தனர். இவர்களுடன் சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்மன், வரதராஜபெருமாளும் காட்சி கொடுத்தனர். இதையடுத்து ஒரே நேரத்தில் வரதராஜபெருமாள், சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள், மற்றும் அம்மன்களுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்