கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடிக்கும் படத்தின் பூஜை கிளிக்ஸ்..!
அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார்.;
சென்னை,
தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் தற்போது அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில், புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தில் இயக்குனரும், நடிகருமான மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த புதிய படத்தின் பூஜை, நேற்று படக்குழுவினர் கலந்துகொள்ள, வெகு விமரிசையாக நடைபெற்றது. கோர்ட் ரூம் டிராமாவாக உருவாக உள்ள இந்த படத்தில் ஹார்ட்பீட் சாருகேஷ், பாலசரவணன், பாலாஜி சக்திவேல், சுந்தர்ராஜன், மாலா பார்வதி, தீபா, ஸ்டில்ஸ் பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கோயம்புத்தூரில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.