பிரபல நடிகருக்கு மாரடைப்பு; தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

பிரபல மலையாள நடிகர் ராஜேஷ் கேசவ் (வயது 47);

Update:2025-08-28 00:15 IST

திருவனந்தபுரம்,

பிரபல மலையாள நடிகர் ராஜேஷ் கேசவ் (வயது 47). இவர் மலையாளத்தில் பியூட்டிபுல், திருவனந்தபுரம் லாட்ஜ், ஓட்டல் கலிபோர்னியா உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், மலையாள திரைத்துறையில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், ராஜேக்‌ஷ் கேசவிற்கு கடந்த 24ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதையடுத்து, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்து டாக்டர்கள் கண்காணிப்பில் இருப்பதாக என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Tags:    

மேலும் செய்திகள்