பிருத்விராஜ் நடித்துள்ள புதிய படத்தின் டீசர் வெளியீடு
ஜெயன் நம்பியார் இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்துள்ள ‘விலாயாத் புத்தா’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.;
தமிழ், மலையாள சினிமாவில் பிரபல நடிகரான பிருத்விராஜ் மலையாளத்தில் கடந்த சில ஆண்டுகளாக நல்ல படங்களைக் கொடுத்ததுடன் லூசிபர், ப்ரோ டாடி, எம்புரான் ஆகிய திரைப்படங்களை இயக்கி இயக்குநராக அங்கீகாரம் பெற்றார்.குறிப்பாக, மலையாள சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமான எம்புரான் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமானது.
இயக்குனர் ஜெயன் நம்பியார் இயக்கத்தில் ‘விலாயாத் புத்தா’ படத்தில் பிருத்விராஜ் நடித்துள்ளார். இப்படம் சந்தனக் கடத்தல் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.மலையாள எழுத்தாளர் ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய ‘விலயாத் புத்தா’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, மறையூர் பகுதியில் நடைபெற்றது. ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், ‘விலயாத் புத்தா’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரில் 'குட்டி வீரப்பன்', 'புஷ்பா இன்டர்நேஷ்னல், நான் லோக்கல்' என்ற வசனங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.