சிவராஜ்குமார், உபேந்திரா நடித்த '45' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அர்ஜுன் ஜன்யா இயக்கியுள்ள '45' என்ற படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.;

Update:2025-08-23 10:35 IST

சென்னை,

பிரபல கன்னட இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா தற்போது இயக்குனராக அறிமுகமாக உள்ளார். அதன்படி, '45' என்ற படத்தை இவர் இயக்கியுள்ளார். இதில், சிவராஜ்குமார், உபேந்திரா மற்றும் ராஜ் பி ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பான் இந்திய மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.டீசர் காட்சிகளைப் பார்க்கும்போது படம் பேண்டசி கலந்த கதையாக உருவாகியுள்ளதால் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தநிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 45 படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி, இப்படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் மாதம் 25ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்