கும்பமேளாவில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது கார் விபத்து: 4 பெண்கள் உட்பட 6 பேர் பலி
கும்பமேளாவில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.;
பாட்னா,
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதனிடையே, பீகாரின் பாட்னாவில் உள்ள ஒரு கிராமப்புறத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் கும்பமேளாவில் பங்கேற்றுவிட்டு காரில் திரும்பி கொண்டிருந்தனர்.
பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தின் அருகே சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது மோதியது.
இந்த கோர விபத்தில் 4 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உள்ளூர் கிராம மக்களின் உதவியுடன் சிதைந்த காரிலிருந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.