நாட்டின் பாதுகாப்பு விஷயத்தை அரசியலாக்க விரும்பவில்லை: டி.கே.சிவக்குமார்
மத்திய அரசுக்கு நாங்கள் ஆதரவாக நிற்கிறோம் என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.;
பெங்களூரு,
கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது. இத்தகைய நெருக்கடியான தருணத்தில் மத்திய அரசுக்கு நாங்கள் ஆதரவாக நிற்கிறோம். இது தான் தற்போது முக்கியம். பாஜக நிர்வாகிகள் சிலர் ராகுல் காந்தி வெளிநாட்டில் இருக்கும்போது இந்த சம்பவம் நடந்துள்ளதாக கருத்து கூறியுள்ளனர். அனைவரும் அமைதி காக்க வேண்டும். இந்த தாக்குதலை யாரும் அரசியலாக்க கூடாது.
இந்தியர்களை காப்பாற்ற வேண்டும் என்பது தான் முக்கியமாக இருக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பு விஷயத்தை அரசியலாக்க நாங்கள் விரும்பவில்லை. சிலர் இதை அரசியலுக்கு பயன்படுத்துகிறார்கள். இந்த மண்ணில் சட்டத்தின்படியே அனைத்தும் நடக்கிறது. எங்களுக்கு நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.