எல்.ஐ.சி. பங்குகளை விற்கிறது - மத்திய அரசு

எல்.ஐ.சி.யில் மத்திய அரசுக்கு 96.5 சதவீத பங்குகள் உள்ளன.;

Update:2025-07-11 07:41 IST

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் 3.5 சதவீத பங்குகளை கடந்த 2022-ம் ஆண்டு மத்திய அரசு விற்பனை செய்தது. அதன்மூலம் மத்திய அரசுக்கு ரூ.21 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தது.

தற்போது, எல்.ஐ.சி.யில் மத்திய அரசுக்கு 96.5 சதவீத பங்குகள் உள்ளன. மீண்டும் பங்குகளை விற்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதுபற்றிய ஆலோசனை, ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது.

எவ்வளவு பங்குகளை விற்பது, விலைவிவரம், காலம் ஆகிய விவரங்கள் உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. விதிமுறைப்படி, 2027-ம் ஆண்டு மே 16-ந் தேதிக்குள், மேலும் 6.5 சதவீத எல்.ஐ.சி. பங்குகளை மத்திய அரசு விற்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்