முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம்; ராகுல் காந்தி அஞ்சலி

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி;

Update:2025-05-21 11:17 IST

டெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி. இவர் 1984 முதல் 1989 வரை நாட்டின் பிரதமராக செயல்பட்டார். இதனிடையே , முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி கொல்லப்பட்டார்.

இந்நிலையில், ராஜீவ் காந்தியின் 34வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார். அதேபோல், பிரதமர் மோடியும் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்